2024 மே 14-ஆம் தேதி முதல் மே 20-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் தெய்வ அனுகூலம் இருப்பதால், எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் அமைவதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு. குடும்பத்தில் வெகுநாட்களாக சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருந்தால் தற்போது நடக்கும். அதற்காக நிறைய செலவு செய்வீர்கள். நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு, குழந்தை பாக்கியம் உண்டு. எவ்வளவு வருமானம் வந்தாலும் அதற்கான செலவினங்கள் இருக்கின்றன. கிரக நிலைகள் சரியில்லாததால், விட்டதை பிடிக்க ஆசைப்பட்டு இந்த வாரத்தில் பெரிய அளவில் ஷேர், டிரேடிங், டிஜிட்டல் கரன்சி, ரேஸ், லாட்டரி போன்ற எதிலும் முதலீடு செய்யாதீர்கள். எல்லாவற்றிலும் லாபம் வருவது போன்று ஒரு தோற்றம் மட்டுமே ஏற்படும். ஆனால் லாபம் கிடைக்காது. காதல் விஷயங்கள் ஒன்றும் சிறப்பாக இல்லை. பிரேக் அப் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. வேலையை பொறுத்தவரை ஏதோ ஒரு வேலை இருந்து கொண்டே இருக்கும். உடல் உழைப்பு தொடர்பான வேலை அதிகமாக இருக்கும். வேலையில் மன அழுத்தம் அதிகமாக இருக்கும். செய்யும் வேலையை திருப்தியோடு செய்யுங்கள். சொந்த தொழில் பிரமாதமாக இருக்கும். எதிர்பாராத பொருள் வரவு, தன வரவு இருக்கும். மூத்த சகோதர - சகோதரிகளால் நன்மை, நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டு. வாரம் முழுவதும் விநாயகர் வழிபாடு மற்றும் சிவனை தரிசனம் செய்யுங்கள். நல்லதொரு முன்னேற்றம் அமையும்.

Updated On 14 May 2024 12:02 PM IST
ராணி

ராணி

Next Story