2024 மே 28-ஆம் தேதி முதல் ஜூன் 03-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களை அறியாத தைரியம், தன்னம்பிக்கை, பயம், பீதி போய் நம்பிக்கை, தைரியம் கூடும். எந்த சவாலையும் துணிச்சலாக சந்திப்பீர்கள். பொருளாதார நிலைகளை பொறுத்தவரையில், எவ்வளவு வருமானங்கள் வந்தாலும் செலவினங்களும் இருக்கும். சொந்த தொழில் சுமாராக உள்ளது. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். நீங்கள் நஷ்டம் அடைவீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு அது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். இரண்டாம் திருமணத்திற்கும் வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் அமையும். உயர்கல்வி நன்றாக உள்ளது. நீங்கள் நினைப்பது அனைத்தும் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஷேர் மார்க்கெட், டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்யும்பொழுது கவனமாக செய்யுங்கள். நம்முடைய பணம், பொருள் திருடு போவதற்கான வாய்ப்புகள், தேவையில்லாத செலவினங்கள் ஆகியவை உள்ளன. எதிர்பாராத என்டெர்டெயின்மென்ட், டூர், டிராவல் போன்றவற்றை அனுபவிப்பீர்கள். இல்லையென்றால், உங்களின் பணம் முடங்குதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேலையை பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. இந்த வாரம் முழுவதும் மகாலட்சுமியை வழிபாடு செய்யுங்கள். சிவத்தலத்தில் இருக்கக்கூடிய அம்பாளை தரிசனம் செய்து வாருங்கள்.
