2024 ஜூன் 04-ஆம் தேதி முதல் ஜூன் 10-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் வேலையில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள். எந்த துறையில் பணியாற்றினாலும் வேலையை பொறுத்தவரை கவனமாக இருங்கள். நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றியடையும். சொந்த தொழில் சுமாராக இருக்கிறது. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். நீங்கள் நஷ்டம் அடைவீர்கள். திருமண வாழ்க்கையை பொறுத்தவரை உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. குடும்பத்தில் சுப காரியங்கள் உண்டு. சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் இருக்கிறது. தொழில்முனைவோராக வர நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. மூத்த சகோதர - சகோதரிகள், நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம், நன்மைகள் உண்டு. குறிப்பாக அந்நிய மொழி பேசும் நண்பர்கள் புதிதாக கிடைப்பார்கள். அவர்களால் நற்பலன்கள் ஏற்படும். பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங், மியூச்சுவல் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டாம். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி இருக்கிறது. வருமானங்கள் சுமார். அரசியல் வாழ்க்கை பிரகாசமாக இல்லை. இந்த வாரத்தில் முருகனையும், துர்க்கையையும் பிரதானமாக வழிபாடு செய்யுங்கள்.
