2024 ஜூன் 11-ஆம் தேதி முதல் ஜூன் 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பொருளாதார நிலை நன்றாக உள்ளது. உங்களின் வருமானங்களை ஏதாவது ஒன்றில் முதலீடு செய்வது நல்லது. அப்படி செய்யாத பட்சத்தில் கணவன் - மனைவி இருவரில் யாராவது ஒருவருக்கு தேவையில்லாத செலவினங்கள் ஏற்படும். பேச்சின் மூலமாக ஒருபுறம் வருமானத்தை சம்பாதித்தாலும், அதற்கேற்ற செலவினங்களும் உள்ளது. இடம், வீடு, வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அம்மாவுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஷேர் மார்க்கெட், டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட், லாட்டரி, ரேஸ் போன்ற யூக வணிகங்கள் அனைத்திலும் முதலீடு செய்ய நினைப்பவர்கள் அடக்கி வாசியுங்கள். எல்லாமே லாபம் வருவது போன்ற தோற்றத்தை தரலாம், ஆனால் லாபம் இல்லை. வேலை வாய்ப்புகள் பரவாயில்லை என்றாலும் வேலையில் நிறைய மாற்றங்கள் உண்டு. வழக்குகளில் ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. சொந்த தொழில் சுமாராக உள்ளது. கூட்டுத் தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். நீங்கள் நஷ்டம் அடைவீர்கள். உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வாக்கு கூடும். இந்த வாரம் முழுவதும் முருகன் மற்றும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்து வாருங்கள்.
