2024 ஜூன் 25-ஆம் தேதி முதல் ஜூலை 01-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களின் விருப்பங்கள் பூர்த்தியாகும். ஆசைகள் நிறைவேறும். நீங்கள் எடுத்த கடினமான முயற்சிகள் வெற்றியடையும். நீங்கள் எதிர்பார்த்த செய்திகள் உங்களுக்கு சாதகமாக வரும். நீங்கள் நம்பியவர்கள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு உதவி செய்வார்கள். இறைவனுடைய அனுகிரகம் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது. நண்பர்கள் பெரிய அளவில் உதவிகரமாக இருப்பார்கள். பெரிய அளவில் இண்டஸ்ட்ரி, ஸ்டார்ட் அப் கம்பெனி தொடங்க நினைப்பவர்கள் தாராளமாக தொடங்கலாம். வேலையை பொறுத்தவரை எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இருந்துகொண்டே இருக்கும். எந்தவிதமான கலைத்துறையில் பணியாற்றுபவராக இருந்தாலும் இந்த வாரம் உங்களுக்கு பிரகாசமாக இருக்கிறது. ஷேர் மார்க்கெட், டிரேடிங், மியூச்சுவல் பண்ட், ரேஸ், லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சுமாரான அளவிலேயே செய்யுங்கள். பின்னாளில் நல்லதொரு ரிட்டன்ஸ் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. வெளிநாட்டு தொடர்புகள் எதுவாக இருந்தாலும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் நடைபெறும். சொந்த தொழில் மற்றும் கூட்டுத்தொழில் இரண்டுமே நன்றாக உள்ளது. பண வரவு, பொருள் வரவு, தனவரவு ஆகியவற்றை எதிர்பார்த்து காத்திருந்தால், வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த வாரம் முழுவதும் முருகன் மற்றும் சனி பகவானை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 25 Jun 2024 9:00 AM IST
ராணி

ராணி

Next Story