2024 மார்ச் 12-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கணவன் - மனைவி இருவரில் யாராவது ஒருவருக்கு தேவையில்லாத விரயம், நஷ்டம், மருத்துவச் செலவுகள் ஏற்படும். கருத்துவேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே இருக்கும். தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை ஏற்படும். ஓரளவிற்கு வருமானங்கள் இருக்கும். வேலையில் பிரச்சினைகள் ஏதும் இல்லை. உங்கள் வாழ்க்கையில் எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் அது வருவதில் தடை ஏற்படும். தேவையில்லாமல் கடன் வாங்க வேண்டாம். பழைய கடனை அடைக்க புதிய கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் வந்து சேரும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியடைவதுபோல் தோன்றும், ஆனால் அவற்றில் நிறைய பிரச்சினைகள் உண்டாகும். அதனால் பொறுமையாக செயல்படுவது நல்லது. போக்குவரத்து, வண்டி, வாகனங்களில் சென்று வரும்பொழுது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்களது ஆசைகள், அபிலாஷைகள் பூர்த்தியாகும். நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். தன்வந்திரி பகவான் மற்றும் சிவபெருமான் வழிபாடு நன்மையை அளிக்கும்.
