2024 ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

எவ்வளவு சம்பாதித்தாலும் ஏதாவது செலவுகள் இருக்கும். மனதில் ஒரு நிம்மதியற்ற சூழ்நிலைகள் உருவாகும். பொருளாதார நிலைகள் பரவாயில்லை. கடுமையாக முயற்சி செய்யுங்கள் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத பயணம், பிறகு அதில் பிரச்சினை ஏற்பட்டு வெற்றி கிடைக்கும். இந்த வாரத்தில் கடன் வாங்குவதாக இருந்தால் அளவோடு வாங்குங்கள். குறிப்பாக இந்த வாரம் முழுவதும் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஏதோ ஒரு வேலை, வருமானம், சம்பாத்தியம் இருந்துகொண்டே இருக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு தகுந்த விற்பனை இல்லை. அதனால் லாபம் இருக்காது. கல்வியில் கவனம் செலுத்துங்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றங்கள் உண்டு. ஷேர் மார்க்கெட், ரேஸ், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றில் முதலீடு செய்பவர்கள், சுமாரான அளவில் செய்யுங்கள். பெரிதாக லாபமும் இல்லை. நஷ்டமும் இல்லை. இந்த வரம் 8-ஆம் இடத்தில் குரு, புதன் இருப்பதால் குழந்தைகளுக்காக நிறைய செலவு செய்வீர்கள். அவர்களை பிரிந்து இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. கணவன் - மனைவியிடையே தேவையில்லாத விரயம், பிரிவு போன்ற ஏதாவது ஒரு நிகழ்வு நடக்கும். எனவே இந்த வாரம் தெய்வ அனுகூலம் அவசியப்படுகிறது. வாரம் முழுவதும் விநாயகர் வழிபாடு மற்றும் சிவ தலத்தில் இருக்கக்கூடிய பைரவர் வழிபாடு ஏற்றத்தை தரும்.

Updated On 2 April 2024 12:01 AM IST
ராணி

ராணி

Next Story