2024 மே 21-ஆம் தேதி முதல் மே 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
யாரெல்லாம் உயர்கல்வியில் ஆர்வமாக இருக்கிறீர்களோ அவை நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேறு அலுவலகம், வேறு வேலைக்கு மாற நினைப்பவர்கள் முயற்சி செய்யலாம். நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. சொந்த தொழில் பரவாயில்லை. இரண்டாம் திருமணம் செய்ய நினைப்பவர்கள் அதற்காக முயற்சி செய்யுங்கள். கண்டிப்பாக கைகூடி வரும். விவாகரத்து கேட்டு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். வேலையை பொறுத்தவரை பிரச்சினை இல்லை. ஏதாவது ஒரு வேலை இருக்கும். அதில் பெரிய அளவில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நல்லதொரு வேலையாட்கள் அமைவார்கள். புரொடக்ஷன் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. ஆனால், லாபம் இல்லை. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரிடமும் பேசாதீர்கள். ஷேர் மார்க்கெட், டிரேடிங் போன்ற எதில் முதலீடு செய்வதாக இருந்தாலும் இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இல்லை. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி ஆகியவை இருக்கிறது. ஆனால், வருமானங்கள் என்பது சுமார்தான். பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தால் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த வாரம் முழுவதும் சிவன் தரிசனமும், பெருமாள் வழிபாடும் செய்து வாருங்கள்.
