2024 பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோசம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பாராத பயணம் உண்டாகும். ஷேர் மார்க்கெட், லாட்டரி, டிரேடிங் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ் கூடும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற வாய்ப்பில்லாததால் பொறுமையோடு செயல்படுவது நல்லது. உங்கள் பணியில் நிறைய விடுப்பு எடுப்பீர்கள். சொத்துக்கள் கைவிட்டு போகும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு தகுந்த விற்பனை இருக்கும். ஆனால் நல்ல லாபம் இல்லை. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். புதிய காதல் ஏற்பட வாய்ப்புள்ளது. சொந்த தொழில் சுமாராக இருக்கும். துர்க்கை மற்றும் சிவன் வழிபாடு செய்வது சிறந்தது.
