2024 மார்ச் 26-ஆம் தேதி முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
தேவையில்லாத குழப்பம் ஏற்படும். பயப்பட வேண்டாம். தைரியமாகவும், தன்னம்பிக்கையாகவும் இருங்கள். எல்லா பிரச்சினைகளில் இருந்தும் மீண்டு வருவதற்கான வாய்ப்பு இருந்துகொண்டே இருக்கும். தேவையில்லாமல் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். புதிதாகவும் கடன் வாங்காதீர்கள். புதிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். புதிய விஷயங்களில் எதுவும் ஈடுபட வேண்டாம். தேவையில்லாத சிந்தனைகளை தவிர்த்து விடுங்கள். நெருங்கிய உறவினர்கள் விஷயத்தில் கவனமாக இருங்கள். அதிலும் இளைய சகோதர - சகோதரிகள் விஷயத்தில் உறவுகளை பலப்படுத்துங்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்ஷனுக்கு தகுந்த நல்ல சேல்ஸ் இருக்கும். புதிதாக நகை மற்றும் ஆடைகளை, கடன் வாங்கியாவது எடுத்து மகிழ்வீர்கள். எல்லா விசயங்களிலும் கவனமாக இருப்பது நல்லது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு காலம் சுமாராக உள்ளது. அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஷேர் மார்க்கெட், ரேஸ், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றில் முதலீடு செய்யும்போது கவனமாக இருங்கள். லாபம் வருவதுபோல் இருக்கும். ஆனால் வராது. நம்முடைய உழைப்பு மற்றவருக்கு லாபமாக இருக்கும். சிவ வழிபாடு மிகவும் முக்கியம். பெருமாளையும் தரிசிப்பது சிறந்தது.
