✕
2023, டிசம்பர் 19 முதல் டிசம்பர் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
தெய்வ அனுகூலம் உண்டு. துணிந்து செயல்படுவதில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம் சுமாராக இருக்கும். வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். மகிழ்ச்சிக்காக செலவு செய்வீர்கள். உடன் வேலைபுரிபவர்கள் மற்றும் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலையில் அதிருப்தி ஏற்படும். தொழில் தகராறு, தொழிலில் நிச்சயமற்ற தன்மை ஏற்படும். அம்மாவின் அன்பும், ஆதரவும் பரிபூரணமாக கிடைக்கும். கடன் கொடுத்தால் திரும்ப வராது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நரசிம்மர், ஆஞ்சநேயர் வழிபாடு செய்ய நற்பலன்கள் கிட்டும்.

ராணி
Next Story