✕
2024 பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கும். எதிர்பாராத பயணம் ஏற்படும். பேச்சின் மூலமாக சம்பாதிப்பவர்களுக்கு வருமானம் வரும். அதே நேரம் செலவினமும் ஏற்படும். சொந்த தொழில் மற்றும் திருமண வாழ்க்கை பரவாயில்லை. வேலையில் பிரச்சினைகள் ஏதும் இல்லை. உடன் பணியாற்றுபவர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள். உற்பத்தி தொழிலில் லாபம் இருக்காது. அம்மா மற்றும் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கல்வியில் கவனமாக இருங்கள். யாரிடமும் தேவையில்லாமல் கடன் வாங்க வேண்டாம். அறுவை சிகிச்சை ஏதேனும் செய்ய வேண்டி இருந்தால் இந்த வாரத்தில் செய்துகொள்ளுங்கள். முருகன் மற்றும் சிவன் கோயிலில் இருக்கும் அம்பாள் வழிபாடு சிறப்பை தரும்.

ராணி
Next Story