2024 பிப்ரவரி 20 முதல் 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்கள் ஆசைகள், அபிலாஷைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நீங்களும் அவற்றில் கலந்து கொள்வீர்கள். பொருளாதார நிலைகள் பரவாயில்லை. வருமானத்திற்கு தகுந்த செலவினங்களும் ஏற்படும். எதிர்பாராத வெளியூர் மற்றும் சுற்றுலா பயணம் செய்வீர்கள். புதிய முயற்சிகளில் ஆரம்பத்தில் நிறைய தடைகள் ஏற்படும். எந்த ஒரு விஷயத்திலும் பொறுமை, நிதானம் அவசியம். உற்பத்தி சார்ந்த துறைகளில் பெரிய அளவில் லாபம் கிடைக்காது. அதே நேரம் விவசாயத்தொழிலில் லாபம் கிடைக்கும். ஷேர் மார்க்கெட், லாட்டரி, ரேஸ், ட்ரேடிங் போன்ற எதிலும் முதலீடுகள் செய்ய வேண்டாம். அதேபோன்று புதிய முதலீடுகளும் செய்ய வேண்டாம். கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். மணவாழ்க்கை சரியில்லாமல் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளோருக்கு சாதகமான முடிவு கிடைக்க வாய்ப்புள்ளது. விநாயகர் மற்றும் பெருமாள் வழிபாடு ஏற்றம் தரும்.

Updated On 20 Feb 2024 12:01 AM IST
ராணி

ராணி

Next Story