2024 மார்ச் 5-ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
குழப்பமான மனநிலை நீங்கி, தைரியம், தன்னம்பிக்கை ஏற்படும். பொருளாதார ரீதியாக எந்த பிரச்சினையும் இல்லை. புதிய முயற்சிகள் வெற்றியடையாது. இளைய சகோதர - சகோதரிகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இரண்டும் உண்டாகும். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் மகிழ்ச்சி ஏற்படும். உற்பத்தி துறையில் இருப்பவர்களுக்கு விற்பனை மற்றும் லாபம் இருக்காது. வருமானம் இருக்கும் அதே அளவுக்கு செலவுகளும் உண்டாகும். ஷேர் மார்க்கெட், லாட்டரி, ரேஸ் போன்றவற்றில் சுமாரான முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு சுமாரான ரிட்டன்ஸ் கிடைக்கும். விளையாட்டுத்துறையில் இருப்பவர்களுக்கு விருதுகள் மற்றும் ஸ்பான்சர்ஷிப் கிடைக்கும். வேலையில் பிரச்சினை இல்லை. உடன் பணியாற்றுபவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். வெளிநாட்டு தொடர்புகள் நன்றாக இருக்கும். பட்ட மேற்படிப்பை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். குலதெய்வம் மற்றும் முருகப்பெருமான் வழிபாடு ஏற்றம் தரும்.
