2024 மார்ச் 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

லாபம், நஷ்டம் இல்லாமல் தொழில் சுமாராக இருக்கும். வேலையை பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. பொருளாதாரம் பரவாயில்லை. நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் ஆரம்பத்தில் நிறைய தடைகள் வரும். ஆனாலும் இறுதி வெற்றி உங்களுக்குத்தான். இருந்தும் பெரிய முயற்சிகள் ஏதும் செய்ய வேண்டாம். பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். எல்லாவிதமான உறவுகளுடனும் தொடர்பில் இருப்பது மிகவும் முக்கியம். எல்லா விஷயங்களையும் உங்கள் தலையில் தூக்கி வைத்துக்கொள்ள வேண்டாம். உற்பத்தி சார்ந்த துறைகள் மற்றும் காதல் சார்ந்த விஷயங்கள் சுமாராக இருக்கும். காதல் முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது. விட்டதை பிடிக்க ஆசைப்பட்டு ஷேர் மார்க்கெட், ரேஸ், லாட்டரி, ஆன்லைன் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டாம். ஏனென்றால் நீங்கள் செய்யும் முதலீடு பெரிய அளவில் லாபத்தை பெற்றுத்தராது. சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பிரம்மா மற்றும் விநாயகர் வழிபாடு சிறப்பைத் தரும்.

Updated On 19 March 2024 12:01 AM IST
ராணி

ராணி

Next Story