2024 ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் நடைபெறும். மன வாழ்க்கையை பொறுத்தவரை ஒருபுறம் தேவையற்ற மகிழ்ச்சி, இன்னொருபுறம் மனவருத்தங்கள் ஏற்படும். தேவையில்லாமல் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அது திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை மற்றும் லாபம் இல்லை. சொந்த பிசினஸில் தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை இருக்கிறது. அதனால் தொழில் விட்டு விட்டு நடக்கும். வேலையை பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. ஏதோவொரு வேலை, வருமானம், சம்பாத்தியங்கள் இருந்துகொண்டே இருக்கும். இந்த வாரம் உங்கள் உடல் ஆரோக்கியத்திலும், அப்பாவின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். அறுவை சிகிச்சை செய்வதாக இருந்தால் இந்த வாரத்திலேயே செய்யுங்கள். நீண்ட தூர பயணம் ஏதும் செய்ய வேண்டாம். புதிய முயற்சிகளில் தடைகள் இருக்கிறது. பெண் நண்பர்களால் மகிழ்ச்சி ஏற்படும். ஆராய்ச்சி தொடர்பாக படிப்பவர்களுக்கு நல்லதொரு முன்னேற்றம் இருக்கிறது. கருடாழ்வார் மற்றும் நவகிரகத்தில் இருக்கக்கூடிய சனிபகவானை வழிபடுவதன் மூலம் பிரச்சினைகள் தீரும்.
