2024 ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் ஏப்ரல் 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
சொந்த தொழில் மற்றும் கூட்டுத் தொழில் நன்றாக உள்ளது. நீண்ட நாட்களாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கும் அதற்கான வாய்ப்புகள் உள்ளன. கணவன் - மனைவியிடையே சின்ன சின்ன சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் இருந்துகொண்டே இருக்கும். இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் தடைகள் இருந்தாலும், இறுதியாக வெற்றிகள் குவியும். கடன் வாங்க நினைப்பவர்களுக்கு கடன் கிடைக்கும். ஆனால், எந்த காரியத்திற்காக வாங்குகிறீர்களோ அது பூர்த்தியாகுமா? என்றால் சந்தேகம்தான். அதனால் அவசியம் இருந்தால் மட்டுமே கடன் வாங்குங்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு பெரிய அளவில் லாபம் இல்லை. அதனால் எல்லா விஷயங்களிலும் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். பொருளாதார நிலைகள் பரவாயில்லை. வேலையில் எதிர்பார்க்கக்கூடிய முன்னேற்றங்கள் சுமாராக உள்ளது. உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பவர்கள் முயற்சி செய்யலாம். சிவன் மற்றும் சிவத்தலத்தில் இருக்கக்கூடிய பிரம்மாவை வழிபடுவது சிறந்தது.
