2024 ஏப்ரல் 30-ஆம் தேதி முதல் மே 6-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு சிறப்பாக உள்ளது. பெரிய முயற்சிகள் ஏதும் செய்ய வேண்டாம். இளைய சகோதர - சகோதரிகளால் தேவையற்ற பிரச்சினைகள், நிம்மதியற்ற சூழல்கள் இருந்து கொண்டே இருக்கும். சொத்துக்கள் விற்பதில் தடைகள் இருக்கிறது. வீடு, இடம், ஊர் மாற நினைப்பவர்கள் கொஞ்சம் காத்திருங்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, புரொடக்ஷனுக்கு தகுந்த விற்பனை, லாபம் இருக்கிறது. டாக்குமெண்ட் விஷயங்களில் பிரச்சினைகள் இருப்பதால் கொஞ்சம் கவனமாக இருங்கள். அதேபோன்று நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். இந்த வாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அந்த பணம் திரும்ப வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. அரசாங்கம் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருங்கள். உங்களது கௌரவம், அந்தஸ்து, புகழ் ஏதோவொரு வகையில் கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆராய்ச்சி தொடர்பாக படிக்க நினைப்பவர்கள் படிக்கலாம். இந்த வாரம் நரசிம்மர் வழிபாடு மற்றும் நவக்கிரகத்தில் இருக்கக்கூடிய சனிபகவானை வழிபாடு செய்வது நற்பலன்களை தரும்.
