2024 மே 7-ஆம் தேதி முதல் மே 13-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் ராசிநாதன் புதன் 8-ல் சூரியன் மற்றும் சுக்கிரனுடன் இருப்பதால் இந்த வாரம் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக போக்குவரத்து, வண்டி வாகனங்களில் சென்று வரும்பொழுது எச்சரிக்கையாக இருங்கள். அரசாங்க விஷயங்களில் கவனமாக இருங்கள். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அறுவை சிகிச்சை செய்ய நினைத்தால் இந்த வாரத்தில் செய்து கொள்ளுங்கள். கணவன் - மனைவி உறவு சுமாராக இருக்கும். சொந்த தொழில் பரவாயில்லை. கூட்டுத்தொழில் செய்தால் பார்ட்னர் லாபம் அடைவார். நீங்கள் நஷ்டம் அடைவீர்கள். கையில் பணம், தனம் இருந்தாலும் செலவினங்கள் அதிகமாக ஏற்படும். உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம், உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. தொழில் தகராறு அல்லது தொழில் நிச்சயமற்ற தன்மை இருக்கும். இளையவர்கள் கல்வியில் கவனம் செலுத்துங்கள். குறிப்பாக உங்களின் அம்மா - அப்பா உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, உற்பத்திக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. லாபம் இல்லை. ஷேர் மார்க்கெட், லாட்டரி, ரேஸ், ஆன்லைன் பிசினஸ், டிரேடிங் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் அடக்கி வாசியுங்கள். எல்லாவற்றிலும் லாபம் வருவது போல் ஒரு தோற்றம். ஆனால், வராது. இந்த வாரம் மகாலட்சுமி வழிபாடு மற்றும் சிவ தரிசனம் மிக அவசியம்.
