2024 மே 14-ஆம் தேதி முதல் மே 20-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் கவனமாக செயல்பட வேண்டும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அந்த பணம் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பவர்கள் முயற்சி செய்யுங்கள். இந்த வாரத்தில் அறுவை சிகிச்சை செய்வதாக இருந்தால் செய்யுங்கள். வேலையில் கவனம் செலுத்துங்கள். சொந்த தொழில் நன்றாக உள்ளது. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். இரண்டாம் திருமணம் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிசினஸ் செய்ய நினைப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. அப்பாவால் நன்மைகள் உண்டு. உயர் கல்விக்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக ஆராய்ச்சி, பி.ஹெச்.டி தொடர்பாக படிக்க நினைப்பவர்கள் படிக்கலாம். பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப் கேட்டு விண்ணப்பித்திருந்தால் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தாலும் கிடைக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, புரொடக்ஷனுக்கு தகுந்த விற்பனை சுமாராக இருக்கிறது. காதல் விஷயங்கள் சுமார். அரசியல் வாழ்க்கை சிறப்பாக இல்லை. தெய்வ அனுகூலம் இருக்கிறது. அதனால் நீங்கள் என்னவெல்லாம் நினைக்கிறீர்களோ, அவற்றை முயற்சி செய்யுங்கள். வாரம் முழுவதும் மகாலட்சுமி வழிபாடு மற்றும் சிவ தரிசனம் செய்து வாருங்கள். இறையருளால் நன்மைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Updated On 14 May 2024 6:29 AM GMT
ராணி

ராணி

Next Story