2024 மே 28-ஆம் தேதி முதல் ஜூன் 03-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களுக்கு நீண்ட தூர பயணம் இருக்கிறது. உயர்கல்வியை தொடர வாய்ப்புள்ளது. அப்பாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். வேறு அலுவலகம் மாற முயற்சிப்பவர்களுக்கு அதற்கான சூழ்நிலைகள் உள்ளன. பொருளாதார நிலைகள் நன்றாக உள்ளன. இரண்டாம் திருமணம் செய்ய நினைப்பவர்கள் முயற்சிக்கலாம். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. சொந்த தொழில் நன்றாக உள்ளது. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் மற்றும் நீங்கள் இருவரும் லாபம் அடைவீர்கள். இந்த வாரத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேலையை பொறுத்தவரை நன்றாக உள்ளது. அலுவலகம் மாற நினைத்தால் மாறலாம் அல்லது அதே வேலையை தொடர நினைத்தால் தொடரலாம். ஆனால், தனித்துவமாக தெரிவதற்கான வாய்ப்புகள் இல்லை. அம்மாவின் அன்பு, ஆதரவு எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அதற்கான சூழ்நிலை நிறையவே இருக்கிறது. காதல் விஷயங்கள் சுமாராக இருக்கிறது. ஒருபக்கம் மகிழ்ச்சி, சந்தோஷம் இருந்தாலும், நிறைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. ஏதாவது ஒன்றில் முதலீடு செய்வதாக இருந்தால் செய்யுங்கள். இந்த வாரத்தில், ஆஞ்சநேயர் மற்றும் துர்க்கையை வழிபாடு செய்யுங்கள் சிறப்பாக இருக்கும்.
