2024 ஜூன் 11-ஆம் தேதி முதல் ஜூன் 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
ஒருபுறம் உங்களுடைய கௌரவம், அந்தஸ்து, புகழ் காப்பாற்றப்படும். இன்னொருபுறம் அதில் நிறைய தடைகள், பிரச்சினைகள் இருக்கின்றன. பொருளாதாரத்தை பொறுத்தவரையில் கையில் பணம், தனம் இருக்கிறது. அதேநேரம் செலவினங்களும் உள்ளன. கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். தேவையற்ற மனக் குழப்பங்கள் வேண்டாம். நிம்மதி இல்லை என்று வருத்தப்பட வேண்டாம். கொஞ்சம் நிதானமாக இருங்கள். கிரகங்கள் மாறிக்கொண்டே இருப்பதால் உங்கள் வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்கள் வரும். எல்லாவிதமான உறவுகளையும் பலப்படுத்துங்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த நல்ல விற்பனை இருக்கிறது. நீண்ட நாட்களாக சொத்துக்கள் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம். அதற்கான வாய்ப்புகள் உள்ளன. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். ஆனால், என்ன காரண காரியத்திற்காக விண்ணப்பித்திருக்கிறீர்களோ அது நடக்காது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வேலையில் கவனமாக இருங்கள். தேவை இருந்தால் மட்டும் கடன் வாங்குங்கள். பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் அடக்கி வாசியுங்கள். லாட்டரி, ரேஸ், கிரிப்டோ காயின் ஆகியவற்றிலும் முதலீடு செய்ய வேண்டாம். இந்த வாரம் முழுவதும் முருகனை வழிபாடு செய்யுங்கள்.
