2024 ஜூன் 25-ஆம் தேதி முதல் ஜூலை 01-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. எதிர்பாராத தெய்வ தரிசனம் உங்களுக்கு அமையும். மூத்த சகோதர - சகோதரிகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. அந்நிய பாஷை, அந்நிய மொழி பேசும் நண்பர்களால் நற்பலன்கள் ஏற்படும். அப்பாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புகள் அத்தனையும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிக்க வாய்ப்புள்ளது. சொந்த தொழில் நன்றாக உள்ளது. கூட்டுத்தொழிலில் இருவரும் லாபம் அடைவீர்கள். பெரிய முயற்சிகள் ஏதும் செய்ய வேண்டாம். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இருக்கின்றன. ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் செய்பவர்களுக்கும் நன்றாக உள்ளது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்லதொரு புகழ் இருக்கிறது. அரசியல் வாழ்க்கையும் பரவாயில்லை. ஷேர் மார்க்கெட், டிரேடிங், மியூச்சுவல் பண்ட் போன்றவற்றில் சுமாரான அளவிலேயே முதலீடு செய்யுங்கள். நல்லதொரு ரிட்டன்ஸ் கிடைக்கும். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் ஏதோவொரு விதத்தில் நன்மைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. விற்பனையாகாத சொத்துக்கள் நல்ல விலைக்கு போகும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது, லாபம் இல்லை. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இந்த வாரம் முழுவதும் முருகன் மற்றும் துர்க்கையை வழிபாடு செய்வதன் மூலம் இன்னும் நற்பலன்கள் கிடைக்கும்.

Updated On 25 Jun 2024 9:08 AM IST
ராணி

ராணி

Next Story