2024 ஜூலை 09-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வாழ்க்கையில் விருப்பம், சின்ன சின்ன ஆசைகள், அபிலாஷைகள் பூர்த்தியாகும். கையில் பணம், தனம், பொருள் இருக்கும். பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. இளைய சகோதர - சகோதரிகளால் நன்மை, உறவுகளால் நற்பலன்கள் ஆகியவை உண்டு. முன்னோர்களின் சொத்துக்கள், கணவன் அல்லது மனைவி மூலமாக பொருள் வரவு இருக்கிறது. வேலை நிமித்தமாக எதிர்பாராத பயணத்தால் நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக வீடு, இடம் விற்காமல் இருந்தால் அது விற்பதற்கான சூழ்நிலைகள் உள்ளன. கல்வியை பொறுத்தவரை நன்றாக உள்ளது. அம்மா மற்றும் அப்பா இருவரின் அன்பு, ஆதரவு முழுமையாக கிடைக்கும். ஷேர் மார்க்கெட், ரேஸ், லாட்டரி, ஆன்லைன் பிசினஸ், டிரேடிங் போன்றவற்றில் சுமாரான அளவில் முதலீடு செய்யுங்கள். பெரிதாக லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. எதிர்பாராத எண்டெர்டெயின்மென்ட், டூர், டிராவல் மற்றும் குடும்பத்தில் சுப காரியங்கள், சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம், ஆன்மீக பயணங்கள் ஆகியவை ஏற்படும். வேலையை பொறுத்தவரை மாற்றத்தை ஏற்படுத்த நினைப்பவர்கள், வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளை செய்யுங்கள். தேவை இருந்தால் கடன் வாங்குங்கள். இந்த வாரம் முழுவதும் நரசிம்மர் மற்றும் பெருமாள் கோயிலில் இருக்கக்கூடிய பைரவரை வழிபாடு செய்யுங்கள்.
