✕
2023, அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 -ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.
பரிவர்த்தனை யோகம் நடைபெறுவதால் நல்ல பலன்களை அனுபவிக்கப் போகிறீர்கள். குடும்பம், வீடு மற்றும் பொருள் சார்ந்த மாற்றங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பேச்சில் சற்று கவனம் தேவை. பிறருக்கு உதவும்போது யோசித்து உதவிசெய்யுங்கள். குடும்பத்துக்குள் சற்று விரயங்கள் ஏற்படலாம். எனவே சிவ வழிபாடு செய்வது சாதகமான பலன்களை ஏற்படுத்தி கொடுக்கும். 31, 1 தேதிகளில் உயர் அதிகாரிகள் மூலம் லாபகரமாக விஷயங்கள் நடக்கும். இருப்பினும் கவனம் அவசியம். 2, 3 தேதிகளில் வெற்றிகள் கிடைக்கும். 4, 5, 6 தேதிகளில் பொருள் லாபம் கிடைக்கும்.

ராணி
Next Story