2025 ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
திருமணம் நடைபெறாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள், அது சம்மந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் பெரிய அளவில் நடக்கும். உங்கள் காதல் வெற்றியடைந்து திருமணத்தில் முடியும். புதிய காதல் மலரும். ஜாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்ட தொடர்புகள் ஏற்படும். இரண்டாம் திருமணத்திற்கும் வாய்ப்புகள் உள்ளன. சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில், ஆன்லைன் பிசினஸ் ஆகியவற்றில் நல்ல வருமானம், சம்பாத்தியம் இருக்கிறது. கூட்டுத்தொழிலில் இருவரும் லாபம் அடைவீர்கள். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தேவையில்லாமல் கடன் கொடுக்காதீர்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துங்கள். உங்களின் விருப்பங்கள், ஆசைகள், அபிலாஷைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலையில் மாற்றங்கள் உண்டு. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை மற்றும் லாபம், வருமானம் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும், விநாயகர் மற்றும் நரசிம்மரை வழிபாடு செய்யுங்கள்.


