2025 மே 06-ஆம் தேதி முதல் 2025 மே 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு ஓரளவுக்கு நன்றாக இருக்கிறது. யாரெல்லாம் இரண்டாவது திருமணத்திற்கு முயற்சி செய்கிறீர்களோ, அவர்களுக்கு இந்த வாரம் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்தால், இந்த வாரம் வரும். அப்பா மற்றும் உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் கையில் பணம் வந்தாலும், அதற்குத் தகுந்த செலவுகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் ஏதோவொரு விதத்தில் வெற்றி பெறும். கவலைப்படத் தேவையில்லை. அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு தேவையற்ற மனக் குழப்பங்கள் மற்றும் நிம்மதியற்ற சூழ்நிலைகள் உருவாகலாம். அதையெல்லாம் பொறுமையாகவும் நிதானமாகவும் கையாளப் பழகுங்கள். உறவுகளால் உங்களுக்கு நன்மையும் ஏற்படும். அதே நேரத்தில் அவர்களால் சில பிரச்சினைகளும் வரலாம். புதிதாக காதல் மலரும். ஏற்கனவே காதலித்தால் அந்த காதல் திருமணத்தில் முடியும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்கள் இந்த வாரம் தங்கள் வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை செய்ய வேண்டாம். ஆண் நண்பர்கள் மற்றும் மூத்த சகோதரர்களால் ஏற்றம் ஏற்படும். இந்த வாரம் முழுவதும், சிவ வழிபாடு மற்றும் மகாவிஷ்ணுவின் தரிசனம் மிகவும் முக்கியம்.

Updated On 6 May 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story