2025 மே 20-ஆம் தேதி முதல் 2025 மே 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

புதிய காதல் முயற்சிகள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. நீங்கள் செய்யும் முதலீடுகள் நல்ல லாபத்தை ஈட்டித்தரும். பெரிய அளவில் தொழில் தொடங்கவும், ஸ்டார்ட் அப் கம்பெனி ஆரம்பிக்கவும், பெரிய தொழில் முனைவோராக வரவும் கனவு காண்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாய்ப்புகளை வழங்கும். திருமணம் தாமதமாகிக் கொண்டிருப்பவர்களுக்கு விரைவில் சுபகாரியங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த வாரம் உங்கள் கையில் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். அதே சமயத்தில் செலவுகளும் இருக்கும். பெரிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ள வேண்டாம். மற்றவர்கள் சொல்வதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவர்களின் அறிவுரைகள் தேவையற்ற பிரச்சனைகளை உண்டாக்கலாம். உறவுகளால் நன்மைகள் ஏற்படுவது போல் தோன்றினாலும் சில பிரச்சினைகள் வரலாம். இளைய சகோதர சகோதரிகளால் மன வருத்தங்களும், பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. பயணங்களால் சில தொந்தரவுகள் உண்டாகும் என்பதால் பொறுமையாகவும், நிதானமாகவும் இருப்பது நல்லது. கல்வியைப் பொறுத்தவரை சிறப்பாக உள்ளது. வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, மிகச் சிறப்பாக உள்ளது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க சந்தர்ப்பங்கள் உருவாகும். இந்த வாரம் சிவனையும், குலதெய்வத்தையும் தவறாமல் வழிபட்டு வாருங்கள்.

Updated On 20 May 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story