2025 மே 27-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 02-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் சிறப்பாக இருக்கும். குறிப்பாக, பெரிய அளவில் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் ஒரு தொழிலதிபர் ஆக விரும்பினால், அதற்கான வாய்ப்புகளும் சூழ்நிலைகளும் இந்த வாரம் அமையும். அரசு தொடர்பான காரியங்களில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற முன்னேற்றங்கள் உண்டாகும். பண வசதி மற்றும் பொருள் வசதி திருப்திகரமாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வாய்ப்புகள் கைகூடும். புதிய உறவுகளும் உருவாகலாம். இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பெரிய அளவில் வெற்றி பெறும் என்பது இல்லை. பாஸ்போர்ட், விசா விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். ஆண் நண்பர்கள் மற்றும் மூத்த சகோதரர்களால் வாழ்வில் ஏற்றம் உண்டாகும். பிரிந்த உறவுகள் மீண்டும் இணையும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு புகழும், அந்தஸ்தும் கூடும். விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கு விருதுகளும் அரசு அங்கீகாரமும் கிடைக்கும். இந்த வாரம் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இறைவனின் அருள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். தந்தையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இந்த வாரம் விநாயகப் பெருமானையும் மகாலட்சுமியையும் வழிபடுவது மிகுந்த பலனை தரும்.
