2025 ஜூன் 03-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
அந்தஸ்து மற்றும் புகழ் கூடும் வாய்ப்புகள் இருந்தாலும், செலவுகள் அதிகரிக்கும். குறிப்பாக, ஏழாம் தேதிக்குப் பிறகு செலவுகள் கட்டுபாட்டை மீறிப் போகக்கூடும். முதலீடு செய்ய விரும்புபவர்கள் தாராளமாகச் செய்யலாம். கல்வித் துறையில் இருப்பவர்களுக்குச் சிறு தடைகள் ஏற்படலாம். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்குப் பெரிய அளவில் லாபம் கைக்கு வராமல் போகக்கூடும். காதல் விஷயங்களில் இந்த வாரம் வெற்றி பெற்று, திருமணமாகும் வாய்ப்புகள் அதிகம். திருமணம் ஆகாதவர்களுக்கு வரன் அமையக்கூடும். விவாகரத்துக்காகக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கலாம். உயர் கல்வியில் சிறிய இடைவெளி ஏற்படலாம். தந்தையின் ஆதரவை எதிர்பார்த்தவர்களுக்குத் தடைகள் ஏற்படக்கூடும். ஒருவேளை நீங்கள் தந்தையை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிய காலமாகவும் இது இருக்கலாம். கணவன் மனைவிக்குள் சிறுசிறு கருத்து வேறுபாடுகளும், சண்டைகளும் ஏற்படலாம். ஒட்டுமொத்தமாக, இந்த வாரம் கன்னி ராசியினருக்குப் பல போராட்டங்கள் இருக்கும். வெளிநாட்டுத் தொடர்புகள் சாதகமாக இருக்கும். ஆராய்ச்சி, பி.எச்.டி. போன்ற துறைகளில் இருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். பி.ஆர்., சிட்டிசன்ஷிப், கிரீன் கார்டு போன்றவற்றுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இந்த வாரம் நல்ல செய்தி வரும். இந்த வாரத்தில் விநாயகரையும் முருகனையும் வழிபடுங்கள்.
