2025 ஜூன் 10-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்கள் அந்தஸ்து, புகழ் கூடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அரசாங்க காரியங்கள் சாதகமாக முடியும். தொழில், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க இந்த வாரம் நல்ல வாய்ப்புகள் உண்டு. வேலை வாய்ப்புகள் பரவாயில்லை. வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு, இதர பணப் பலன்கள் எதிர்பார்க்கலாம். நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். வழக்குகள் இருந்தால் உங்களுக்கு சாதகமாக முடியும். எதிரிகளை வெல்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். காதல் விஷயங்களில் போராட்டங்கள் இருக்கலாம். சொந்த தொழில் சுமாராக இருக்கும். கூட்டுத்தொழிலில் திருப்தியற்ற மனநிலை ஏற்படலாம். மணவாழ்க்கையிலும் இதே நிலைமைதான். கணவன்-மனைவிக்கு இடையே பிரிவு அல்லது தேவையற்ற செலவினங்கள், குறிப்பாக வைத்தியச் செலவுகள் வரலாம். உயர் கல்வியில் கவனம் செலுத்துங்கள். இல்லையெனில் தடை ஏற்படலாம். இந்த வாரம் முழுவதும் மகாலட்சுமியையும், சிவனுடன் கூடிய சக்தியையும் வழிபடுவது நல்லது.

Updated On 10 Jun 2025 12:03 AM IST
ராணி

ராணி

Next Story