2025 ஜூன் 24-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தை சனி பார்ப்பதால், புதிய காதல் விஷயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் ஏற்கனவே காதல் உறவில் இருப்பவர்களுக்கு போராட்டங்கள் அல்லது முறிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் விருப்பங்களும், ஆசைகளும் பூர்த்தியாகும். உங்கள் அந்தஸ்தும், புகழும் கூடும். பண வசதி சுமாராக இருக்கும். வருமானங்கள் இருந்தாலும் செலவுகளும் அதிகம் இருக்கும். வெளிநாட்டு தொடர்புகள் பரவாயில்லை. உயர் கல்வியில் தடை இருக்கலாம். வெளிமாநிலம் அல்லது வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்கள் பொறுமையாக இருங்கள். அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். உற்பத்தித் துறையில் இருப்பவர்களுக்கு விற்பனையும், லாபமும் நன்றாக இருக்கும். இந்த வாரம் உங்களுக்கு வேலை கண்டிப்பாக இருக்கும். வேலையைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். எந்த வேலை கிடைத்தாலும் திருப்தியுடன் செய்யுங்கள். ஏனெனில் 4-ம் இடத்தை குருவும், சனியும் பார்ப்பதால் எல்லாவற்றிலும் திருப்தியற்ற நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. கணவன்-மனைவி உறவில் புரிதல் குறைவாக இருக்கும். இருவருக்கும் மருத்துவச் செலவுகள் வரலாம். இந்த வாரம் முருகப்பெருமானையும், காளியையும் வழிபடுங்கள்.

Updated On 24 Jun 2025 12:03 AM IST
ராணி

ராணி

Next Story