2025 ஜூலை 01-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 07-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் ராசிநாதன் புதன் லாபஸ்தானத்தில் இருப்பதால், இந்த வாரம் உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாவதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்கள் அந்தஸ்து மற்றும் புகழ் அதிகரிக்கும். நட்பு வட்டத்தைப் பராமரிக்கவும்; ஒருபுறம் நண்பர்களால் முன்னேற்றம் இருந்தாலும், மறுபுறம் சிறுசிறு பிரச்சனைகளும் ஏற்படலாம். புதிய முயற்சிகளைத் தவிர்த்து, ஏற்கனவே செய்துவரும் பணிகளில் கவனம் செலுத்துங்கள். நீண்ட நாட்களாக விற்காத சொத்துக்கள் இந்த வாரம் விற்பது கடினம் அல்லது எதிர்பார்த்த விலை கிடைக்காது. கல்வி சிறப்பாக இருக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல விற்பனை மற்றும் உற்பத்தி இருக்கும். விவசாயிகளுக்கு மகசூல் சுமாராக இருக்கும். வேலைவாய்ப்புகள் பரவாயில்லை; திருப்தியற்ற மனநிலை இருந்தாலும், வேலை இல்லாமல் இருக்க மாட்டீர்கள். உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய காதல் மலர வாய்ப்புகள் உண்டு. ஆனால் வெற்றி பெறுவது கடினம். வியாபாரம் ஓரளவு நன்றாக இருந்தாலும், லாபம் கிடைப்பதில் தடங்கல்கள் இருக்கலாம். திருமண வாழ்க்கை திருப்தியற்றதாக இருக்கலாம். மறுமண முயற்சிகள் செய்யலாம். முதலீடு செய்யலாம், இல்லையெனில் தேவையற்ற செலவுகள் உண்டாகும். விநாயகர் மற்றும் காளியை வழிபடவும்.
