2025 ஜூலை 08-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 14-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் அந்தஸ்து மற்றும் புகழ் கூடும். நீங்கள் நினைத்த காரியங்கள் நடக்கும். உங்கள் பேச்சின் மூலம் வருமானமும், சம்பாத்தியமும் அதிகரிக்கும். உயர் கல்வி படிக்க நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. நீங்கள் செய்யும் முயற்சிகள் இந்த வாரம் சுமாராகவே இருக்கும். அதிக முயற்சி எடுத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். நீங்கள் விரும்பாத பல விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளதால், அனைத்தையும் பொறுமையாக கையாளுங்கள். உறவுகளால் தேவையற்ற மன வருத்தங்கள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே உறவுகளிடம் கவனம் தேவை. இளைய சகோதர, சகோதரிகளால் பிரச்சனைகள் தொடரும். தேவையற்ற சிந்தனைகளையும், மன உளைச்சல்களையும் தவிர்க்கவும். குறிப்பாக, பக்கத்து வீட்டு உறவினர்கள் விஷயத்தில் இந்த வாரம் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். கல்வி ஓரளவுக்கு பரவாயில்லை. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு ஏற்ப நல்ல விற்பனை இருக்கும். வேலை வாய்ப்புகளைப் பொறுத்தவரை, வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கும், வேலையை இழந்தவர்களுக்கும் இந்த வாரம் கிரக நிலைகளால் வேலை கிடைக்க சாதகமான சூழ்நிலை உள்ளது. உங்கள் முயற்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் சாதாரணமாகவே இருக்கும். வருமானம் இருந்தாலும், பெரிய அளவில் லாபம் கிடைப்பதற்கான சூழ்நிலை இல்லை. உயர் கல்வி படிக்கலாம். தந்தையின் அன்பு, ஆதரவு கிடைக்கும். உங்கள் அந்தஸ்து மற்றும் புகழ் கூடும். முருகனையும் சிவனையும் வழிபடவும்.
