2025 ஜூலை 22-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 28-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்கள் விருப்பங்கள், எண்ணங்கள், ஆசைகள் இந்த வாரம் நிறைவேற வாய்ப்புள்ளது. பணப்புழக்கம் நன்றாக இருந்தாலும் செலவுகள் அதிகமாக இருக்கும். இந்த ஆடி மாதத்தில் வாய்ப்பிருந்தால் முதலீடுகள் செய்யலாம். புதிய முயற்சிகளில் ஆரம்பத்தில் தடைகள் இருந்தாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும். உறவுகளால் நன்மையும், அதே நேரத்தில் நெருங்கிய உறவுகளை பிரிந்திருக்க வேண்டிய சூழ்நிலைகளும் ஏற்படலாம். இந்த வாரம் யாரையும் நம்பாமல் இருக்க முடியாது. உங்களை மேம்படுத்திக் கொள்வது இந்த வாரம் மிகவும் முக்கியம். கல்வி நன்றாக இருக்கும். விவசாயிகளுக்கு மகசூல் மற்றும் லாபம் உண்டு. உற்பத்தி மற்றும் உற்பத்தி சார்ந்த துறையினருக்கு நல்ல விற்பனையும், லாபமும் கிடைக்கும். திருமண வாழ்க்கை திருப்தியற்றதாக இருக்கும். கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் வரலாம், கவனமாக இருங்கள். வேலையில் திருப்தியின்மை தொடரும். பங்குச்சந்தை, லாட்டரி, ஆன்லைன் வணிகம் போன்ற யூக வணிகங்களில் முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது, லாபம் குறைவு. கலைத்துறையினருக்கு பெயரும், வருமானமும் இந்த வாரம் சுமாராகவே இருக்கும். செவ்வாய், கேது 12 ஆம் இடத்தில் இருப்பதால் இளைய சகோதர, சகோதரிகள் விஷயத்திலும், போக்குவரத்து விஷயத்திலும், தகவல் தொடர்புகளிலும் கவனமாக இருங்கள். முருகப் பெருமானையும், துர்க்கையையும் வழிபடுங்கள்.

Updated On 22 July 2025 12:03 AM IST
ராணி

ராணி

Next Story