2025 ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் வியாபாரம் சுமாராக இருக்கும். ஆனால், ஒரு புதிய தொழில் அல்லது நிறுவனத்தை தொடங்க விரும்புபவர்களுக்கு இது நல்ல நேரம். பணப்புழக்கம் சீராக இருக்கும், யாருடைய பணமாவது உங்கள் கையில் இருந்து கொண்டே இருக்கும். ஆகஸ்ட் 16-க்குப் பிறகு நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவது கடினம். இந்த வாரத்தில் பயணத்தின்போது கவனம் தேவை. உறவுகளைப் பேணுவதில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள். உயர்கல்வி படிக்க விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு இருக்கும். ஆனால், மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு குறைவாக இருக்கலாம். தேவைப்பட்டால் மட்டும் கடன் வாங்க முயற்சி செய்யுங்கள். மற்றபடி, சற்று பொறுத்திருப்பது நல்லது. குடும்பத்தில் குழந்தைகளின் செலவுகள் அதிகரிக்கும். குழந்தைகள் உங்களை விட்டுப் பிரிந்து இருப்பதற்கான சூழல் ஏற்படலாம். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். வெளியூர் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு இது நல்ல நேரம். இந்த வாரம் சிவபெருமானையும் முருகனையும் வழிபடுவது நல்லது.
