2025 ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்கள் ஆசைகளும், அபிலாஷைகளும் பூர்த்தியாகும். உங்கள் எண்ணங்கள் செயல்வடிவம் பெறும். நண்பர்களால், குறிப்பாக ஆண் நண்பர்களால் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். மூத்த சகோதரிகளாலும் நன்மை உண்டு. வசதி உள்ளவர்கள், இந்த வாரம் தாராளமாக முதலீடு செய்யலாம். போக்குவரத்து, வண்டி, வாகனங்களில் எச்சரிக்கையாக இருங்கள். எலிவேட்டர், லிஃப்ட் போன்றவற்றில் கவனமாக இருங்கள். தேவையில்லாத முயற்சிகள் வேண்டாம். உறவுகளைப் பேணுவது முக்கியம். இளைய சகோதர, சகோதரிகளிடமிருந்து பிரிந்து இருக்க நேரிடலாம். விற்காமல் இருந்த சொத்துக்கள் இந்த வாரம் விற்பனை ஆகும் வாய்ப்புகள் உண்டு. தேவையில்லாத குழப்பங்கள், சிந்தனைகள் வேண்டாம். நிம்மதியாக தூங்குவது அவசியம். அரசாங்க சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருங்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். காதல் உறவுகள் வெற்றி பெறுவதில் போராட்டங்கள் இருக்கும். உங்கள் வியாபாரம் நன்றாக இருக்கும். பெரிய அளவில் தொழில் செய்பவர்களுக்கு தொழில் சிறப்பாக இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. முருகனையும், பைரவரையும் வழிபடுவது நல்லது.

Updated On 19 Aug 2025 12:05 AM IST
ராணி

ராணி

Next Story