2025 செப்டம்பர் 09-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்கள் விருப்பங்கள், எண்ணங்கள், ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் ராசிநாதன் புதன் லாப ஸ்தானத்தில் இருப்பதால், இது சாத்தியமாகும். சூரியன் மற்றும் சுக்கிரன் உடன் இருப்பதால், மனைவியின் அன்பும், ஆதரவும், தந்தையின் ஆசீர்வாதமும் கிடைக்கும். கல்வி சிறப்பாக இருக்கும். தாயின் ஆதரவை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு அது கிடைக்கும். உற்பத்தித் துறையில் இருப்பவர்களுக்கு வருமானம் மற்றும் விற்பனை சிறப்பாக இருக்கும். நல்ல உறவுகள் உண்டாகும். பிரிந்து போன உறவுகளால் சில பிரச்சனைகள் இருந்தாலும், சில நன்மைகளும் ஏற்படும். மிகவும் அவசரம், அவசியம் இருந்தால் மட்டுமே பயணம் செய்யுங்கள். லிஃப்ட், எஸ்கலேட்டர், படி ஏறும்போதும், நடக்கும்போதும் கவனமாக இருங்கள். யாருக்கும் தேவையில்லாமல் கடன் கொடுக்க வேண்டாம். அரசு தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள். ஒரு பக்கம் அந்தஸ்து கூடும், அரசின் ஆதரவும், பெரிய மனிதர்களின் நட்பும் கிடைக்கும். இன்னொரு பக்கம் அரசின் மூலம் பிரச்சனைகளும் வரலாம். உங்கள் வேலை விஷயத்தில், ராகு உங்கள் சேவை ஸ்தானத்தில் குருவுடன் இருப்பதால், வேலை இருக்கும். ஆனால், திருப்தியற்ற மனநிலை தொடரும். உங்கள் வேலையை ரசித்து செய்தால் நன்றாக இருக்கும். சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள். இந்த வாரம் விநாயகர் மற்றும் துர்கையை வழிபடுவது நல்லது.

Updated On 9 Sept 2025 12:03 AM IST
ராணி

ராணி

Next Story