2025 செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் வருமானம் சீராக இருக்கும். காதல் உறவில் பிரேக்அப் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. ஒருபுறம் காதல் மலர்ந்தாலும், ஏழாவது இடத்தில் சனி இருப்பதால் மறுபுறம் பிரேக்அப் ஏற்படவும் வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக, சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். கூட்டாளிகளுடனான புரிதல் குறைவாக இருந்தாலும் வருமானம் நன்றாக இருக்கும். வேலைவாய்ப்பில் பதவி உயர்வுக்கான வாய்ப்பு உண்டு. நீங்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும். தேவையற்ற முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது, ஏனெனில் வெற்றி கிடைப்பது கடினம். வெளியூர் அல்லது வெளிநாடுகளில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இது நல்ல நேரம். தேவையற்ற செலவுகள், குறிப்பாக பெண்கள் மற்றும் உறவினர்களால் உண்டாகும் செலவுகளைத் தவிர்ப்பது அவசியம். உற்பத்தித் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் நன்றாக இருக்கும். இந்த வாரம் நீங்கள் விநாயகர் மற்றும் பெண் தெய்வங்களை வழிபடுவது, குறிப்பாக அம்பாளை வழிபடுவது உங்கள் அதிர்ஷ்டத்தை மேம்படுத்தும்.

Updated On 23 Sept 2025 12:17 AM IST
ராணி

ராணி

Next Story