இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

என்னதான் சன் ஸ்கிரீன், மேக்கப் என போட்டுக்கொண்டு வெளியே சென்றாலுமே முகம் கருத்துவிடும். அதேநேரம் இயற்கை முறைகளில் சரும நிறத்தை அதிகரிக்கலாம், கருமையை போக்கலாம் என்றாலும் பலருக்கும் நேரம் இருப்பதில்லை. உடனடியாக ரிசல்ட் வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் உடனே பார்லர் செல்வார்கள். கருமையைப் போக்கி, நிறத்தை அதிகரிக்க என்ன மாதிரியான ஃபேஷியல் செய்யலாம் என விளக்குகிறார் அழகு கலை நிபுணர் பிரியா.

முதலில் ஒரு ஈரத்துணியால் முகத்தை துடைக்க வேண்டும். எப்போதுமே முதலில் முகத்தை க்ளென்ஸ் செய்யவேண்டும். இதனால் முகத்திலுள்ள இறந்த செல்கள் நீங்கும். ஜெல் தன்மையுள்ள க்ளென்ஸர்களை பயன்படுத்துவது நல்லது. மேலும் க்ளென்ஸ் செய்யும்போது சர்குலர் வடிவில் செய்தால் ரிலாக்ஸாக இருக்கும். 10 நிமிடம் இப்படி செய்து ஈரத்துணியால் சுத்தமாக துடைத்து எடுக்கவேண்டும்.


முகத்தை ஈரத்துணியால் துடைத்தல் - க்ளென்ஸர் கொண்டு சுத்தம் செய்தல்

அடுத்து அதேபோல் சர்குலர் வடிவில் ஸ்கரப் செய்யவேண்டும். இது இன்னும் ஆழமாக சருமத்துக்குள் ஊடுருவி இறந்த செல்களை அகற்றி ஆங்காங்கே முகத்தில் இருக்கும் கருமையையும் நீக்கும். குறிப்பாக, கண், மூக்கு, வாயை சுற்றிலும் சற்று அழுத்தம் கொடுத்து ஸ்கரப் செய்தால் கருமை படியாது. ஃபேஷியல் செய்யும்போது காதுகளுக்கு பின்புறமும், கழுத்து பகுதியிலும் செய்ய வேண்டும்.

ஸ்கரப்பை நன்றாக துடைத்துவிட்டு ஸ்டீமிங் செய்ய வேண்டும். இதனால் சருமத் துவாரங்கள் திறக்கும். பிறகு ப்ளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸை நீக்கியபிறகு ஈரத்துணியால் துடைக்கவேண்டும்.


ப்ளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸை நீக்குதல் - டோனரால் மசாஜ் செய்தல்

அடுத்து ஃபேஷியல் மசாஜ். அதாவது டோனர் கொண்டு முகம் முழுக்க மென்மையாக மசாஜ் செய்துவிட்டு, அடுத்து ஜெல் கொண்டு மசாஜ் செய்யவேண்டும். இதனால் சருமம் புத்துணர்ச்சி பெறும். ஒவ்வொன்றையும் 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவேண்டும்.

இதுபோன்ற மசாஜ்களை செய்யும்போது கண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கண்களை சுற்றியும் கடிகார முள் திசை மற்றும் எதிர்திசையில் 10 நிமிடங்களுக்கு செய்யவேண்டும்.


மசாஜ் செய்யும் முறை - ஃபேஸ்பேக் போடுதல்

அடுத்ததாக மசாஜ் கிரீமை தடவ வேண்டும். ஜெல், மசாஜ் கிரீம்களை துடைக்க தேவையில்லை. மூக்கு பகுதியில் மசாஜ் செய்யும்போது மூச்சை உள்ளிழுத்து விட்டால் ரிலாக்ஸாக இருக்கும். அதேபோல் வாயின் மேல்பகுதி மற்றும் கீழ்ப்பகுதியிலும், காதுப்பகுதியிலும் அழுத்தம் கொடுத்து நன்றாக மசாஜ் செய்யவேண்டும்.

இதற்கு மேல் பேக் போடவேண்டும். ப்ளீச் செய்யும்போது கண்களுக்கு மேல் போடக்கூடாது. ஆனால் பேக்கை கண்களுக்கு மேல், காது மற்றும் கழுத்துப்பகுதிகளில் தடவலாம். இதனை 10 நிமிடங்கள் உலரவைத்து துடைத்து எடுக்கவேண்டும். இதனால் முகம் பளபளப்பாகும். நிறமும் அதிகரிக்கும்.

Updated On 22 Jan 2024 6:35 PM GMT
ராணி

ராணி

Next Story