இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

அழகு குறிப்பு கட்டுரைகளில் ஒவ்வொரு வாரமும் விதவிதமான மேக்-அப் லுக், ஹேர் ஸ்டைல் உள்ளிட்டவற்றை பார்த்து வருகிறோம். வெட்டிங் மேக்-அப்களில் ஹேர் ஸ்டைலுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பெரிது. இப்போது மணப்பெண் மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைலில் பல்வேறு மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்பட்டுள்ளன. முஸ்லிம் திருமணங்களை பொறுத்தவரை ஹேர் ஸ்டைல் செய்து, ஷால் வைத்து தலையை கவர் செய்துவிடுவார்கள். எனவே முஸ்லிம் மணப்பெண்களுக்கு செய்யும் ஹேர் ஸ்டைல், ஓரளவுக்கு சிம்பிளாக இருந்தாலே போதும். அந்த வகையில் இந்த வாரம் முஸ்லிம் வெட்டிங் ஹேர் ஸ்டைல் எப்படி செய்யலாம் என சொல்லிக் கொடுத்து விளக்குகிறார் அழகு கலை நிபுணர் லலிதா.

செயல்முறை :

ஹேர் ஸ்டைல் செய்வதற்கு முன்னாள் முடியை கிரிம்ப் செய்ய வேண்டும். பிறகு ஹேர் மூஸ் அப்ளை செய்தால் வறண்ட முடி சற்று மிருதுவாகவும், அடர்த்தியாகவும் இருக்கும்.

அடுத்ததாக முன் நெற்றி பக்கத்தில் இருக்கும் முடிகளை சற்று விட்டுவிட்டு, பின் முடியை சிறு சிறு பகுதிகளாக பிரித்து பேக் கோம்ப் செய்து பஃப் அமைத்து மைல்டாக ஹேர் ஸ்ப்ரே, ஷைனிங் ஸ்ப்ரே அடித்து, ஸ்லைடு பின் போட்டு பஃப்பை செட் செய்து கொள்ள வேண்டும்.


ஃப்ரெண்ட்டில் இருக்கும் முடியை கோம்ப் செய்து டிவிஸ்ட் செய்யும் முறை

பிறகு முன்னாள் விட்ட நெற்றி முடியை பேக் கோம்ப் செய்து, டிவிஸ்ட் செய்து ஸ்லைடு பின் வைத்து பின் செய்ய வேண்டும். செட்டிங் ஸ்ப்ரேவும் அடிக்க வேண்டும். இவ்வாறு இரண்டு புறமும் செய்ய வேண்டும்.

பின்னால் இருக்கும் முடியை எடுத்து மூன்றாக பிரித்து நடுவில் இருக்கும் முடியை மட்டும் டோனட் பன் வைத்து பின் செய்ய வேண்டும். அதன் பிறகு இரண்டு பக்கமும் இருக்கும் முடிகளை வைத்து டிவிஸ்ட் செய்து பன் போல பின் செய்ய வேண்டும். அதன் மீது செட்டிங் ஸ்ப்ரே அடித்தால் முடி கலையாமல் இருக்கும்.


பூக்கள் மற்றும் ஹேர் ஜுவல்ஸ் வைத்து செய்யப்பட்டு அலங்காரம்

உடையின் நிறத்திற்கு ஏற்ப பூக்களை வைத்து, அதனுடன் ஹேர் ஜுவல்ஸ் வைத்தால் பார்க்க அழகாக இருக்கும்.

ஃப்ரெண்ட்டில் இருக்கும் முடியை, மூஸ் அப்ளை செய்து கைகளால் சுருட்டி பின் செய்து சிறிது நேரம் கழித்து எடுத்தால் கர்லிங் ஹேர் பார்க்க நன்றாக இருக்கும்.


முழுமையான முஸ்லிம் வெட்டிங் மேக்-அப் லுக்

கூந்தல் பராமரிப்பின் முக்கியத்துவம் :

.* வாரத்திற்கு மூன்று முறை தலை குளிப்பது சிறந்தது. தலை குளிப்பதற்கு முன்னால் உச்சந்தலையில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் வைத்து குளித்தால் உடல் சூடு குறையும். முடியும் மிருதுவாக ஆரோக்கியமாக இருக்கும்.

* கெமிக்கல் நிறைந்த ஷாம்பு பயன்படுத்துவதை தவிர்த்து விடுவது நல்லது. அதற்கு பதிலாக வீட்டிலேயே சியக்காய் பொடி அரைத்துவைத்து தலைக்கு குளிப்பது நல்லது.

* கறிவேப்பிலை, முருங்கை கீரை போன்ற இரும்பு சத்து நிறைந்த பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

Updated On 15 July 2024 6:12 PM GMT
ராணி

ராணி

Next Story