இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

முடி உதிர்தல், முடி வளர்ச்சியின்மை, முடியின் அடர்த்தி குறைதல் என்று பலரும் ஒவ்வொரு தலைமுடி பிரச்சினைகளால் வருத்தப்பட்டு வருகின்றனர். அதில் பொடுகும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. பல மருந்துகள், எண்ணெய்களை உபயோகித்தும் பொடுகு நீங்காதவர்கள் எளிதாக டீ டிகாஷனில் பொடுகு மருந்து தயாரிப்பது எப்படி என்பதை விளக்கியுள்ளார் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

  • பொதுவாகவே உலர் உச்சந்தலை உள்ளவர்களுக்கு பொடுகு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. பொதுவாக பொடுகு என்பது மலசீசியா எனப்படும் பூஞ்சை ஆகும். இது எளிதாக படரும். குறிப்பாக ஏற்கனவே பொடுகு இருப்பவர்கள் தலைக்கு குளித்துவிட்டோ அல்லது வியர்ப்பதாலோ தலையை ஈரத்தோடே வைத்திருந்தால் பொடுகு பிரச்சினை மேலும் அதிகமாகும்.

மைல்டு ஷாம்பூ கொண்டு தலையை சுத்தம் செய்தல்

  • பொடுகு உள்ளவர்கள் முதலாவதாக தலையை ஜெல் அல்லது பேஸ்ட் தன்மை கொண்ட ஷாம்பூவை உபயோகித்து தலையை 5 நிமிடத்திற்கு மெதுவாக மசாஜ் செய்து குளிக்க வேண்டும். குறிப்பாக பொடுகு எந்த இடத்தில் அதிகம் இருக்கிறதோ அங்கு அதிக கவனம் செலுத்தி நன்றாக தேய்த்து குளிக்கவேண்டும். 5 - 10 மி.லி ஷாம்பு பயன்படுத்துவது போதுமானது.
  • தலைக்கு குளித்த பின்னர் ட்ரையர் உபயோகிப்பதை தவிர்த்துவிட்டு மென்மையான காட்டன் துண்டைக்கொண்டு பொறுமையாக தலையை துவட்ட வேண்டும். நன்றாக துவட்டிய பின்னர் தலையை உலரவிட வேண்டும். அடுத்ததாக பொடுகு நீங்குவதற்கான மருந்தை தயாரித்துக்கொள்ள வேண்டும்.

கிரீன் டீ டிகாக்‌ஷன் பேக் தயார் செய்யும் முறை

  • பொடுகு நீங்க ஒரு சிறிய கண்ணாடி கிண்ணத்தில் துளசி கிரீன் டீ அல்லது சாதாரண கிரீன் டீ இரண்டு பேக்குகளை எடுத்துக்கொண்டு ஒரு கப் வெந்நீர் ஊற்றி அந்த டீயின் சாரம் உள்ளிறங்கும் வரை வெந்நீரில் டிப் செய்து பின்னர் அதை ஆறவிட வேண்டும்.
  • 10 நிமிடங்கள் கழித்து தேயிலை எண்ணெய் (tea tree oil) 4 - 5 சொட்டு டிகாக்ஷனில் சேர்த்து கலக்கிக்கொள்ள வேண்டும். அடுத்ததாக ஸ்பிரே பாட்டிலில் இதை ஊற்றி தலைமுடியை பகுதி பகுதிகளாக பிரித்து உச்சந்தலையில் ஸ்ப்ரே செய்யவேண்டும். பொடுகு அதிகமாக இருப்பவர்கள் இதை தினமும் செய்யலாம் அல்லது வாரத்திற்கு 2 முதல் 3 நாட்களுக்கு செய்யலாம். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் பொடுகு நீங்கும்.
Updated On 25 Oct 2023 4:55 AM GMT
ராணி

ராணி

Next Story