இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நமது முன்னோர்கள் குறிப்பாக பெண்கள் தங்கள் கைகள் மற்றும் முகத்திலுள்ள முடியை நீக்க மஞ்சள் போன்றவற்றை பயன்படுத்தினார்கள். ஆனால் இப்போதுள்ள ஆண்கள், பெண்கள் இருவருமே தங்கள் கைகள் மற்றும் கால்களில் முடி வளர்வதை விரும்புவதில்லை. அதனை நீக்க வாக்ஸிங் முறையையே பெரும்பாலும் தேர்ந்தெடுக்கின்றனர். வாக்ஸிங்கில் உள்ள வகைகள் மற்றும் அதன் பயன்கள் குறித்து விளக்குகிறார் பியூட்டீஷியன் பிரியா.

பொதுவாக வாக்ஸிங்கில், ஹனி வாக்ஸிங் மற்றும் ரைகா வாக்ஸிங் என இரண்டு வகைகள் இருக்கின்றன. சுகாதார காரணங்கள் மற்றும் வலி குறைவாக இருப்பதால் ரைகா வாக்ஸிங்கின் விலை ஹனி வாக்ஸிங்கைவிட சற்று அதிகமாக இருக்கும். இரண்டு வாக்ஸிங்கையும் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

முதலில் ரோலர் வாக்ஸ். இந்த வாக்ஸ்கள் பொதுவாக கார்ட்ரிட்ஜ்லேயே (cartridge) வந்துவிடுகின்றன. இதில் சாக்லேட், கற்றாழை போன்று நிறைய ஃப்ளேவர்கள் இருக்கின்றன.


ரைகா வாக்ஸிங் செய்யும் முறை

முடி எந்த திசையில் வளர்கின்றதோ அதே திசையில் க்ரீம் தடவ வேண்டும். வாக்ஸிங் ஸ்ட்ரிப்பை பயன்படுத்தி அதற்கு எதிர்திசையில் முடியை எடுக்கவேண்டும். வேகமாக செய்யும்போது வலி குறைவாக இருக்கும். இப்படி கை முழுக்க செய்யவேண்டும். இதனால் கையிலுள்ள கருமையும் நீங்கும்.

அடுத்ததாக ஹனி வாக்ஸிங். இதை வீட்டிலேயே கூட தயாரிக்கலாம். 1:1 என்ற அளவில் சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறை சேர்த்து சூடாக்கினால் பாகு பதத்தில் வந்துவிடும். இதனை மஸ்லின் துணியை பயன்படுத்தி வீட்டிலேயே வாக்ஸ் செய்யலாம்.

பார்லர்களில் பெரும்பாலும் ரெடிமேட் வாக்ஸ்களை பயன்படுத்துகிறார்கள். இதற்கு முதலில் கை முழுக்க பவுடர் தடவ வேண்டும். இதனால் வியர்க்காது. வாக்ஸும் சருமத்தில் ஒட்டாது. வாக்ஸ் சூடானவுடன் அதனை வாக்ஸ் ஸ்பாட்சுலா அல்லது வாக்ஸ் கத்தியால் எடுத்து முதலில் சூட்டின் அளவை தொட்டுப் பார்க்க வேண்டும்.


ஹனி வாக்ஸிங் செய்யும் முறை

பின்னர் இதனை முடி வளர்ந்திருக்கும் திசையில் கைகளில் தடவி வாக்ஸ் ஸ்ட்ரிப்பால் எதிர் திசையில் எடுக்கவேண்டும். இப்படி கைமுழுக்க செய்யவேண்டும்.

கைகளில் அதிகமாக முடி இருப்பவர்கள், பைக் ஓட்டுவதால் கைகள் கருமையானவர்கள் வாக்ஸிங் செய்துகொள்ளலாம். தொடர்ந்து வாக்ஸிங் செய்ய செய்ய முடி வளர்ச்சியின் அளவு படிப்படியாக குறைந்துவிடும்.

வாக்ஸிங் செய்து முடித்தபிறகு அந்த இடத்தில் சிறிது நேரத்திற்கு அரிப்பு மற்றும் சரும துளைகள் திறப்பதால் சிறு வீக்கம் போன்றவை ஏற்படும். மேலும் பிசுபிசுப்பாக இருக்கும். எனவே கற்றாழை ஜெல் தடவ வேண்டும். அரிப்பு, வலி அதிகமாக இருந்தால் அதனைப் போக்க ஐஸ் கட்டிகள் கொண்டு மசாஜ் செய்யலாம்.

Updated On 29 Jan 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story