பிக் பாஸ் 7 -இன் 38 வது நாளின் ப்ரோமோ வெளியிடப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு டாஸ்க்குகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில் இன்றைக்கான ஜாலி டாஸ்க்காக ஏற்கனவே ஒவ்வொரு போட்டியாளர்களால் ஒவ்வொரு நபரை பற்றி ஒவ்வொரு ஸ்டேட்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டேட்மென்டை பிக் பாஸ் டிவியில் ஒவ்வொன்றாக திரையிட்டு அந்த ஸ்டேட்மென்ட் யார் யாருக்கு கூறியது? ஏன் அதை சொன்னார்கள்? என்பதை வெளிப்படையாக அனைத்து போட்டியாளர்கள் முன்னும் கூற வேண்டும் என்பதே இன்றைக்கான ஒரு டாஸ்க்காக பிக் பாஸ் அறிவித்திருக்கிறது.

இப்படி ஒவ்வொரு ஸ்டேட்மென்டாக திரையிடப்படும் நிலையில் நிக்சன் கூறிய ஸ்டேட்மென்ட் வீட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறிய ஸ்டேட்மென்டில், ‘Vinusha வேலக்காரி… Not my type. ஒரு ஒருத்தங்களுக்கு ஒண்ணு attract ஆகணும்ல? எனக்கு வந்து உடம்புங்கறது perfect- ஆ இருக்கணும். இதுக்கேத்த இது. இதுக்கேத்த இது. இதுக்கேத்த இது. அவங்களுக்கு மண்ட மட்டும் குட்டியா இருக்கு. அவங்க கண்ணு நல்லா இருக்கு. Dress போட்டா perfect - ஆ இருக்கு. அது okay… பூர்ணிமாக்கா அழகா இருக்காங்க. அந்த மாதிரிதான் இருக்கணும் perfect…’ என்று கூறியிருக்கிறார். வினுஷா வெளியேற்றப்பட்டதால் வினுஷாவின் சார்பாக சக போட்டியாளர்கள் இந்த ஸ்டேட்மென்ட்க்கான விளக்கம் அளிக்கும்படி கூறி பொங்கி எழுந்துள்ளனர். நிக்சன் அதனை சமாளிக்கும் விதமாக, “நான் எந்த ஒரு தப்பான நோக்கிலும் கூறவில்லை” என்று கூறிவிட்டு சென்று அமர்ந்தார். இதற்கு போட்டியாளர் அர்ச்சனா மட்டும் சம்பந்தமே இல்லாமல் கை தட்டியுள்ளார். இவர் கோபத்தில் கை தட்டினாரா அல்லது நக்கல் செய்ய கை தட்டினாரா என்பது தெரியவில்லை.


அதேபோல் அவரு ஆம்பள இல்லனு feel பண்றாரா என்ன? என்ற ஸ்டேட்மென்ட் வந்தபோதும் அர்ச்சனாவும் மற்றும் சில போட்டியாளர்களும் கலாய்க்கும் விதமாக சிரித்துள்ளனர். இந்த ஸ்டேட்மென்டை ஜோவிகா, தினேஷை பார்த்துக் கூறியுள்ளார். அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக அவர் ரெட் கார்டு தூக்கவில்லை என்பதற்காக இந்த ஸ்டேட்மென்ட் கூறினார் என்றும் கூறியுள்ளார். பூர்ணிமா அர்ச்சனாவை நோக்கி ‘நீ ஆயாம்மா வேலைக்கு வரல. ஒரு கேம் விளையாட வந்து இருக்க.. எது தேவையோ அது பேசு’ என்று கூறியிருக்கிறார். அதேபோல் போட்டியாளர் பிராவோவை நோக்கி மூன்று போட்டியாளர்கள் ஒவ்வொரு ஸ்டேட்மென்டை கூறியுள்ளனர். இதில் குறிப்பாக இந்த வாரத்தின் கேப்டன் மாயா, ‘அவன் மூஞ்சி பாக்கறது இல்லங்க. கீழேருந்து மேல பாக்கறான்’ என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Updated On
ராணி

ராணி

Next Story