இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

மாஸ்ட்ரோ இளையராஜாவின் 50 ஆண்டு கால இசைப் பயணத்தை கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டுவிழா நடத்தப்பட்டது. இதில் இளையராஜா குறித்து நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்டோர் பேசிய பேச்சு வைரலாகி வருகிறது. குறிப்பாக ரஜினி கூறிய சில சுவாரஸ்யமான தகவல்கள் பலரை ரசிக்க வைத்தாலும், பலர் நெகடிவ் விமர்சனமும் செய்து வருகின்றனர். இளையராஜா குறித்து ரஜினிகாந்த் பகிர்ந்த சில தகவல்கள் மேடை நாகரிகத்திற்கு ஏற்புடையது அல்ல என்று கூறிவருகின்றனர். இதுபோன்று சினிமா உலகில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களையும், அவற்றின் பின்னணிகளையும் இங்கு பார்ப்போம்.

தனது சொந்தவீட்டை இலவச பள்ளிக்கூடமாக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ்

தனது வீட்டை பள்ளிக்கூடமாக மாற்றும் ராகவா லாரன்ஸ்!

குரூப் டான்சராக, பின் நடன இயக்குநராக அதன்மூலம் கதாநாயகனாக, தற்போது இயக்குநராக உயர்ந்துள்ளவர்தான் ராகவா லாரன்ஸ். நல் உள்ளம் கொண்ட மனிதராக அவர் ஏழை குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். கடந்த 2011ஆம் ஆண்டு லாரன்ஸ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றப்படம் காஞ்சனா. இதனைத்தொடர்ந்து இரண்டு பாகங்கள் எடுக்கப்பட்டன.

https://x.com/offl_Lawrence/status/1966154651327418534?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1966154651327418534%7Ctwgr%5E2d4744a9f016290c93303a9f5cdc2fc4d6ec9881%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fcinema%2Fcinema-news%2F2025%2FSep%2F12%2Ffree-education-school-for-children-after-kanchana-4-shooting-starting-raghava-lawrence-announced


தற்போது காஞ்சனா-4 உருவாகி வருகிறது. இந்நிலையில் காஞ்சனா-4 படத்திற்காக கிடைத்த முன்பணம் மூலம் தனது வீட்டை பள்ளிக்கூடமாக மாற்ற உள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் வளர்ந்த ஒருவரே அப்பள்ளிக்கூடத்திற்கு முதல்வராக பணியமர்த்தபட உள்ளதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கும்கி 2 படத்தின் அறிமுக வீடியோவை வெளியிட்ட சிம்பு

‘மீண்டும் பிறந்தேன்’ - கும்கி2 அறிவிப்பு!

பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிப்பில் 2012ம் ஆண்டு வெளியான படம் 'கும்கி'. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் பாடல்களும் ஹிட் அடித்தன. இந்நிலையில் கும்கி-2 படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இரண்டாம் பாகத்தையும் பிரபு சாலமன்தான் இயக்குகிறார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் அறிமுக வீடியோவை நடிகர் சிம்பு பகிர்ந்து, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார்.

ஹன்சிகாவின் மனுவை தள்ளுபடி செய்த மும்பை உயர் நீதிமன்றம்

‘வரதட்சணை கொடுமை’ - ஹன்சிகாவின் மனுவை தள்ளுபடி செய்த மும்பை உயர் நீதிமன்றம்!

கடந்த சில நாட்களாகவே நடிகை ஹன்சிகாவின் விவாகரத்து தொடர்பான செய்திகளும், அவரது தம்பி மனைவி தொடர்ந்த வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்பான தகவல்களும் இணையத்தில் உலாவந்து கொண்டிருக்கின்றன. நடிகை ஹன்சிகா திருமணம் செய்துகொண்டு சில ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் தற்போது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் 2021ல் நான்ஸி என்ற பெண்னை திருமணம் செய்து கொண்டார். ஒரே வருடத்தில் அவர்கள் பிரிந்துவிட்டனர். நான்சி கடந்த வருடம் ஹன்சிகா மற்றும் அவரது அம்மா மீது வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்தார். தன்னை ஹன்சிகாவும் அவரது அம்மாவும் கொடுமைப்படுத்தியாக புகாரில் தெரிவித்திருந்தார். தனது பிறந்த வீட்டில் இருந்து பணம், விலையுயர்ந்த பொருட்களை வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தியதாகவும், தனக்கு கணவருடன் சேர்ந்து வாழவேண்டும் என்று விருப்பம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட FIR-ஐ ரத்து செய்யும்படி மும்பை உயர் நீதிமன்றத்தில் ஹன்சிகா மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் ஹன்சிகாவின் அந்த மனுவை தள்ளுபடி செய்து, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் விரைவில் ஹன்சிகா விசாரணைக்கு அழைக்கப்பட்டு, தேவைப்பட்டால் கைதும் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த வடிவேலு

‘மக்கள்தான் கடவுள்’ - நடிகர் வடிவேலு நெகிழ்ச்சி வீடியோ!

நடிகர் வடிவேலு கடந்த செப்.12ஆம் தேதி தனது 65வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு வடிவேலு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,“எல்லோருக்கும் வணக்கம். என் பிறந்தநாளில் உலகம் முழுவதும் என்னை வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றி. உங்களது வாழ்த்து, என் பெற்றோர், குலதெய்வத்தின் அருள், ஆசியை விட பெரிதானது. மக்கள்தான் எனது கடவுள். என் தெய்வம். மக்கள்தான் எனக்கு எல்லாமே. நீங்கள் இல்லாவிட்டால் இந்த வடிவேலு கிடையாது. இன்றைக்கு இந்தளவு நிமிர்ந்து நிற்கிறேன் என்றால், சினிமாவில் இன்றளவும் ஜொலிக்கிறேன் என்றால் அதற்கு காரணம் உங்கள் ஆசீர்வாதம்தான். உங்களது வாழ்த்து என்றைக்குமே தேவை” என தெரிவித்துள்ளார்.

‘The Chase’ டீசரில் நடிகர் மாதவனுடன் மகேந்திர சிங் தோனி

ஆக்‌ஷன் ஹீரோவாகும் ‘தல’ தோனி!

‘கேப்டன் கூல்’, ‘தல’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி. நீண்ட முடி, ஹெலிகாப்டர் ஷாட் என தனி ஸ்டைலால் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்த தோனி, கடந்த 2020ஆம் ஆண்டு அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இச்செய்தி அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதற்கு ஆறுதல் தரும்விதமாக ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இதனிடையே கிரிக்கெட் போட்டிகளின் மூலம் பிரபலமான தோனி விளம்பரங்களிலும் நடித்துவந்தார். தற்போதும் சில விளம்பரங்களில் நடித்துவருகிறார். விளம்பரங்களில் நடிக்கும் தோனி படத்தில் நடிக்க மாட்டாரா? என எப்போதும் அவரது ரசிகர்களிடையே ஒரு ஏக்கம் இருக்கும். இதற்கு மத்தியில் தோனியின் மனைவி சாக்‌ஷி, ‘தோனி எண்டெர்டெயின்மெண்ட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, தமிழில் ‘எல்ஜிஎம்’ எனும் படத்தையும் தயாரித்திருந்தார். இந்நிலையில் நடிகர் தோனி ஆக்‌ஷன் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். நடிகர் மாதவனுடன் இணைந்து அவர் நடித்துள்ள ‘The Chase’ என்ற மிரட்டலான டீசர் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த டீசரை பிரபல பாலிவுட் இயக்குநர் வாசன் பாலா இயக்கியுள்ளார். ஆனால் இது படம் என இன்னும் கூறப்படவில்லை. இதனால் விளம்பரமாகவும் இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பொங்கலன்று வெளியாகும் சிவகார்த்திகேயனின் பராசக்தி

‘சிவகார்த்திகேயன் பொங்கல்’ - பராசக்தி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பராசக்தி’. இது சிவகார்த்திகேயனின் 25வது படம். இதில் ரவிமோகன் வில்லனாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் அதர்வா நடிக்கிறார். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்தாண்டு ஜன.14ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தாய்மை குறித்து பேசியுள்ள நடிகை சமந்தா

“தாய்மை வரம் எனக்கு கிடைக்கும்” - நடிகை சமந்தா!

தென்னிந்திய சினிமா மட்டுமின்றி தற்போது பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார் நடிகை சமந்தா. தனது விவாகரத்துக்கு பிறகு உடல்நிலை மோசமடைந்தாலும், படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே ‘ஃபேமிலிமேன்’ வெப்தொடர் இயக்குநரான ராஜ் நிடிமொரு என்பவரை சமந்தா காதலித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தனக்கு தாய்மை வரம் கிடைக்கும் என சமந்தா பேசியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. இதுதொடர்பாக பேசிய அவர், “என் நலம் விரும்பிகள் என் வயதைப் பற்றி கவலைப்படுகிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் நான் ஒரு தாயாக மாறுவதற்கு மிகவும் தாமதமாகிவிடும் என்று நினைக்க வேண்டாம். ஒரு தாயாக வேண்டும் என்ற ஆசை இன்னும் எனக்கு இருக்கிறது. அந்த அழகான அனுபவத்திற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்... தாய்மை ஒரு வரம். அந்த வரம் எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஜென்-Z போராட்டத்தை படம்பிடித்த யூடியூபர் ஹாரி

ஒரேநாளில் ஹீரோவான பிரிட்டன் யூடியூபர்...

சமூக வலைதளங்கள் மீதான தடை, ஆட்சியாளர்களின் ஊழல், வேலைவாய்ப்பின்மை போன்றவற்றை எதிர்த்து இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த வாரம் பெரும் போராட்டம் வெடித்தது. போராட்டத்தில் குதித்த Gen Z தலைமுறையினர் பெரும் களேபரத்தில் ஈடுபட்டனர். இதனால் கடும் சேதங்களை சந்தித்தது நேபாளம். போராட்டத்தை கண்டு அஞ்சி பிரதமர், குடியரசுத்தலைவர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய தலைவர்கள் பலரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இடைக்கால அரசு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே தாய்லாந்தில் இருந்து பிரிட்டனுக்கு பைக் டூர் சென்ற ஹாரி என்ற யூடியூப் விளாக்கர், நேபாளத்தில் நடத்த Gen Z கலவரத்தில் சிக்கிக்கொண்டார். அங்கு நடந்த கலவரத்தை அப்படியே கவர்செய்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இதனை பார்க்கும் இணையவாசிகள், "இவர் பத்திரிக்கையாளர்களைவிட சிறந்தவர், bro didn't choose journalism, journalism chose him, எந்த நோக்கமும் இல்லாமல், நேபாளத்தின் வரலாறாக ப்ரோ மாறிவிட்டார்" என கமெண்ட் செய்து வருகின்றனர்.


பாராட்டு விழா மேடையில் ரஜினிகாந்த் & இளையராஜா

இளையராஜா பாராட்டு விழா - மேடை நாகரீகம் இல்லையா ரஜினிக்கு?

இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகால சினிமா இசைப் பயணத்தைக் கொண்டாடும் விதமாக செப். 13 அன்று தமிழ்நாடு அரசு சார்பில் விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ஆண்டுதோறும் இளையராஜா பேரில் விருது வழங்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து இந்த விழா தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், இந்த நொடி இப்படியே உறைந்துவிடாதா என குறிப்பிட்டிருந்தார். இதுபோல கமல்ஹாசன், ரஜினிகாந்த் என பலரும் இளையராஜாவை புகழ்ந்து மேடையில் பேசியிருந்தனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருந்த சில விஷயங்கள் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன. புதிய, பழைய எதிர்க்கட்சியினர் அனைவருக்கும் சவாலாக முதலமைச்சர் இருக்கிறார் என ரஜினி தெரிவித்தார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் சினிமாவிற்கான விழாவில் எதற்காக அரசியல் பேசவேண்டும் என கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல அரை பாட்டில் பீர் அடிச்சிட்டு இளையராஜா ஆடிய ஆட்டம் இருக்கே, விடிய விடிய கிசு கிசுதான் என ரஜினி பேசியிருந்ததும் பல விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.

Updated On 16 Sept 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story