இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

2022-ல் ரகசிய திருமணம் செய்துகொண்ட ராஜ்கிரண் மகள்

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான ஜீனத் பிரியா சின்னத்திரை நடிகரான முனீஸ் ராஜாவை கடந்த 2022 ஆம் ஆண்டு பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். பிரியாவிற்கும் முனீஸ் ராஜாவிற்கும் facebook மூலமாகத்தான் அறிமுகம் இருந்துருக்கு. ஆரம்பத்தில் நட்பாக பழகி பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமண விஷயம் சமூக வலைத்தளத்தில் பரவி வந்த நேரத்தில் அனைவருமே இது ராஜ்கிரணின் மகள் என்று சொல்லி வந்தாங்க. அதற்கு ராஜ்கிரண் அந்த பிரியா என்னுடைய மகளே கிடையாது, என்னுடைய வளர்ப்பு மகள்தான் என்று நீண்ட பதிவு வெளியிட்டிருந்தார்.

அந்தப்பதிவில், சின்னத்திரை நடிகரான முனீஸ் ராஜாவுக்கு பணம்தான் முக்கியம், என்னுடைய பெயரை பயன்படுத்தி சினிமா வாய்ப்பு பெறவே, மகள் பிரியாவை ஏமாற்றி திருமணம் செய்து நாடகம் போடுறாரு, என்னை கேவலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இப்படி செய்துள்ளார் என ராஜ்கிரண் கோபப்பட்டிருந்தார்.


திருமணமான புதிதில் கணவர் முனீஸ் ராஜாவுடன் பிரியா

ராஜ்கிரணின் கருத்தை மறுத்திருந்த மகள் பிரியா

ராஜ்கிரண் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த பிரியா, தங்களுடையது உண்மை காதல் என்று கணவர் முனீஸ் ராஜாவுக்கு சப்போர்ட் செய்து பேசினார். அத்துடன், தங்களை வெறுப்பவர்கள் முன் நன்றாக வாழ்ந்து காட்டுவோம் என்றும் கூறியிருந்தார். சீரியல் நடிகர் முனீஸ் ராஜாவோ, என்னை ராஜ்கிரண் சார் கூப்பிட்டு அடித்திருந்தால் கூட ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால் நான் பணத்திற்காகத்தான் அவருடைய வளர்ப்பு மகளை திருமணம் செய்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டார். இது எனக்கு ரொம்பவும் வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. நான் பிரியாவை மனப்பூர்வமாக காதலிக்கிறேன், அவருக்காக வீடு ஒன்றை கட்டி வருகிறேன். அந்த வீட்டு வேலை முடிந்ததும் பிரியா நினைத்த மாதிரி அவருக்கு ஒரு பிசினஸ் தொடங்கி கொடுப்பேன் என்றெல்லாம் பேசி இருந்தார்.

இருந்தபோதிலும் தன்னுடைய கருத்தில் ஆணித்தரமாக இருந்த ராஜ்கிரண், தன்னுடைய பெயரை எந்த இடத்திலும் அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று தெளிவாக சொல்லிவிட்டார்.


கண்ணீர் வீடியோ வெளியிட்ட மகள் ஜீனத் பிரியா மற்றும் தந்தை ராஜ்கிரண்

உண்மையை உணர்ந்த மகளுக்கு ஓடோடி உதவிய ராஜ்கிரண்

இந்த நிலையில்தான், கண்ணீரோடு கையெடுத்து கும்பிட்டபடி உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார் பிரியா. அதில், நான் 2022 ஆம் ஆண்டு முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்டேன் என்பது மீடியா மூலம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இப்போது நாங்கள் பிரிந்துவிட்டோம். பிரிந்து சில மாதங்களாகிறது. எங்கள் திருமணம் சட்டப்பூர்வமான திருமணம் கிடையாது. இந்த கல்யாணத்திற்காக என்னை வளர்த்த அப்பாவை மிகவும் கஷ்டப்படுத்திட்டேன். அவரை நான் கஷ்டப்படுத்தி இருந்தாலும் எனக்கு ஒரு பிரச்சினை வந்தபோது அவர் என்னை கைவிடாமல் காப்பாற்றினார். இது நான் எதிர்பார்க்காதக் கருணை. எத்தனை முறை நான் அவரிடம் மன்னிப்புக் கேட்டாலும் போதாது. என்னை மன்னிச்சிடுங்க டாடி-னு மன்னிப்பு கேட்டு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

Updated On 2 Feb 2024 10:09 AM GMT
ராணி

ராணி

Next Story