சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 170 வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை அடுத்து அப்படத்தில் பணியாற்ற உள்ள நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.

சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமின்றி உலகளவில் 500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதை தொடர்ந்து ரஜினிகாந்த் 170 வது திரைப்படத்தை 'தோனி', 'பயணம்', 'கூட்டத்தில் ஒருத்தன்' மற்றும் 'ஜெய் பீம்' போன்ற வெற்றி படங்களை இயக்கிய டி.ஜே ஞானவேல் இயக்குவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த திரைப்படத்தை லைக்கா புரோடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.


இந்த நிலையில், நேற்று மாலை இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், மலையாள நடிகர் பஹத் பாசில், தெலுங்கு நடிகர் ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங்க், துஷாரா விஜயன் என்று ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளது இடம்பெற்றுள்ளது ரஜினி ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4 ஆம் தேதியான இன்று தொடங்கியுள்ளது. கூடிய விரைவில் படம் குறித்து இன்னும்பல அப்டேட்ஸ்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On 4 Oct 2023 12:29 PM GMT
ராணி

ராணி

Next Story