நடிகர் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.

தமிழ் திரையுலகின் பன்முக திரை நடிகராக மிளிர்ந்து வருபவர் நடிகர் சியான் விக்ரம். 'கோப்ரா', 'பொன்னியின் செல்வன்' திரைப்படங்களின் வரிசையில் அடுத்ததாக திரையில் வெளிவர இருக்கும் திரைப்படம் தான் 'தங்கலான்'. இயக்குனர் ப.ரஞ்சித்தின் மிக பிரம்மாண்ட படைப்பாக தயாராகி இருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்தில், நடிகர் விக்ரமுடன், நடிகை பார்வதி, மாளவிகா மோகன், நடிகர் பசுபதி உள்ளிட்ட மிக முக்கிய பிரபலங்கள் இணைந்துள்ளனர். மேலும் இப்படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து உள்ளார்.


முழுக்க முழுக்க தங்கம் எடுக்கும் தொழிலாளர்களின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைபபடத்திற்காக நடிகர் விக்ரம் தனது உடல் எடையை பாதியாக குறைத்து நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்பின்போது சண்டைக்காட்சியில் ஏற்பட்ட விபத்தில் விக்ரமின் விலா எலும்பு முறிந்தது. அதற்கான சிகிச்சை மற்றும் நீண்ட ஓய்வுக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பில் ஈடுபட்டார். இது மென்மேலும் ரசிகர்களிடத்தில் திரைப்படம் குறித்த ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது. அதாவது படத்தின் டீசர் வரும் நவம்பர் 1ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘தங்கலான்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி திரைக்கு வரும்விரைவில் என்று நேற்று (27.10.2023) வெளியான செய்தி ரசிகர்ளிடையே இன்று வைரலாகி வருகிறது.

Updated On
ராணி

ராணி

Next Story