2025ஆம் ஆண்டில் வெளியாகும் எஸ்.டி. ஆரின் 48வது திரைப்படம் குறித்த அறிவிப்புகள் பரவிவருகின்றன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் சிலம்பரசன். 'மாநாடு', 'பத்துதல' போன்ற வெற்றிப் படங்களுக்குப் பிறகு தற்போது தனது 48வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ப்ரீ புரொடெக்ஷன்ஸ் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியான போதிலும் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது.
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இப்படம் பெரிய பொருட்செலவில் உருவாவதால் படப்பிடிப்பிற்கு முன்பாக ஒத்திகைப் படப்பிடிப்பு ஒன்றை நடத்தப்போவதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி 2025ஆம் ஆண்டுதான் திரைப்படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.