இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(05.12.1999 தேதியிட்ட ராணி இதழில் வெளியானது)

ஒரு தெலுங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு வந்திருந்தார் சிம்ரன். கோவிந்தாவுடன் நடிக்கும் இந்திப் படத்தின் படப்பிடிப்புக்காக, மாலை புறப்படுகிற டென்ஷனில், சிறிது நேரம் ஒதுக்கி நம்முடன் பேசினார் சிம்ரன்.

“ஓட்டலில் ரொம்ப நாள் தங்கினீர்களே, அந்த வாழ்க்கை பிடிச்சிருக்கா?”

“ரொம்ப அவதியாக இருந்தது, ஓட்டலில் இரண்டு ஆண்டு தங்கி இருந்தேன். சொல்லும்படியாக எதுவும் நடக்கவில்லை. பம்பாய் நடிகைகள் யார் வந்து அந்த ஓட்டலில் தங்கினாலும் அவர்களாகவே வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போவார்கள்.”

“உங்களுக்கும் ராஜு சுந்தரத்துக்கும் இதுவாமே?”

எல்லாமே வதந்திதான். நல்லவேளை ஒரே ஆளுடன் நிறுத்திக்கொண்டார்கள். நான் எல்லாருடனும் ஒரேமாதிரிதான் பழகுவேன்!


நடிகை சிம்ரன், ராஜு சுந்தரத்துடன் தோன்றிய பாடல் காட்சிகள்

“உங்கள் ரசிகர் மன்றம் பற்றி?”

ரசிகர்கள் தானே சொத்து! ஆனால் வருகிற கடிதங்களுக்குத்தான் பதில் எழுத முடிவதில்லை.

“நீங்க ரொம்ப ரிலாக்ஸா எப்போ ஃபீல் பண்ணுவீங்க?

பீச்சுக்குப் போனால், ரிலாக்ஸ் ஆகிவிடுவேன்.

“உங்ககிட்ட உங்களுக்கு பிடிச்சது எது?”

என்னோட ஸ்மைல்தான்.


வித்தியாசமான தோற்றங்களில் நடிகை சிம்ரன்

“உங்கள் பாப்புலாரிட்டிக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?”

ஸ்லிம் தான். அளவான உடம்பு. காலையில் எக்ஸர்சைஸ் பண்ணுவேன். என் சாப்பாட்டில் அரிசியே இருக்காது. நான் பத்து வயது வரை அரிசி சாப்பாடே சாப்பிட்டதில்லை என்று அம்மா சொல்லுவாங்க.

“சமையலில் ரொம்பப் பிடிச்சது?”

வெண்டைக்காய் என்றால் ரசித்துச் சாப்பிடுவேன். தயிர் இல்லாமல் சாப்பிடவே மாட்டேன்.

“நீங்கள் நடிக்க வேண்டிய மூணு படத்தில் ஜோதிகா நடிக்கிறாரே?”

சினிமா உலகில் இதெல்லாம் சாதாரணம். நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை. நம்பர் ஒண்ணாகவும் ஆசையும்பட மாட்டேன்.


கிளாமர் போஸ்களில் சிம்ரன்

“நீங்கள் நடிச்ச கோடீஸ்வரன் படம் ரிலீசாகவில்லையே?”

தயாரிப்பாளர் குஞ்சுமோனிடம் கேட்கவேண்டிய கேள்வி.

“உங்களைப் பற்றி ஒரு ரகசியம்?”

நான் கண்ணாடி போட்டுக் கொள்வேன். ரொம்ப பேருக்குத் தெரியாது.

Updated On 11 Dec 2023 6:41 PM GMT
ராணி

ராணி

Next Story